பெண் ஜென்ம நக்ஷத்திர முதல் ஆண் நக்ஷத்திரம் வரையில் எண்ணி 9 ஆல் வகுக்க மிச்சம் 2, 4, 6, 8, 9 ஆகில் உத்தமம். 1, 3, 5, 7 ஆகாது. பெண்ணுக்கு 7வது ஆண் நக்ஷத்திரம் - வதம்.
ஆணுக்கு 22 வது பெண் நக்ஷத்திரம் வைநாசிகம் கூடாது. பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, முலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, இவை 8ம் ஏக நக்ஷத்திரங்களாக வந்தால் விவாகம் செய்யக் கூடாது. சுபம்.
2. கணப் பொருத்தம்
தம்பதிகளிரண்டு பேருக்கும் ஒரே கணமானாலும், தேவ கணமும், மனுஷ கணமானாலும் உத்தமம். ஆண் ராக்ஷச கணமும், பெண் தேவ கணமுமானாலும் மத்திமம்.
ஸ்த்ரீ ராக்ஷ்ச கணமும், புருஷன் மனுஷ கணமும் ஆனால் விவாகம் செய்யக் கூடாது.
பெண் நக்ஷத்திரத்தில் இருந்து 14க்கு மேல் ஆண் நக்ஷத்திரம் இருந்தால், பெண் ராக்ஷச கணமும் ஆனாலும் தோஷமில்லை. விவாகம் செய்யலாம் என்பது சிலர் கருத்து.
3. மாஹேந்திர பொருத்தம்
ஸ்திரீ நக்ஷத்திரம் முதல் ஆண் நக்ஷத்திரம் வரை எண்ணிக் கண்டது 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆகில் மாஹேந்திர பொருத்தம் உண்டு. தம்பதிகளுக்கு சம்பத்தை கொடுக்கும்.
4. ஸ்திரீ தீர்க்க பொருத்தம்
ஸ்திரீ நக்ஷத்திரத்திற்கு 13க்கு மேல் புருஷ நக்ஷத்திரம் இருந்தால் ஸ்திரீ தீர்க்கம். சிலர் 7க்கு மேற்பட்டால் உண்டு என்பர்.
முன் நக்ஷத்திரம் ஆண் மிருகமாகவும், பின் நக்ஷத்திரம் பெண் மிருகமாகவும் யோனியை அறியவும். குதிரை - எருமை, யானை-சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி- பூனை, கீரி - பாம்பு, மான் - நாய் இவைகள் ஒன்றுக்கொன்று பகை வைரங்கள். தம்பதிகளுக்கு ஏக ஜாதி யோனியானால் உத்தம். சுபம், வெவ்வேறு யோனியானால் மத்திமம். வைர ஜாதி யோனியானால் அதமம். நீக்கத் தக்கது.
6. ராசிப் பொருத்தம்(குடும்ப விருத்தி)
தம்பதிகள் ஒரே ராசியாயினும், ஒருவருக்கு ஒருவர் சமசத்தமாகினும் பெண் ராசிக்கு ஆண் ராசி 6க்கு மேற்படினும் உத்தமம், 3 - 4 மத்திமம். 2, 5, 6, 8 பொருந்தாது. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பமாகில் ஷஷ்டாஷ்டக தோஷமும் மற்ற ராசிகளாகில் 2 ஆம், 12ஆம் இடத்தோஷமுமில்லை என்பது சிலர் கருத்து.
7. ராசி அதிபதிப் பொருத்தம் (மக்கட்பேறு)
பெண் ராசி அதிபதிக்கு புருஷராசி அதிபதி ஒருவரானாலும், நட்பானாலும் உத்தமம். சமமானால் மத்திமம். பகை கூடாது. ஸ்திர ராசி யுக்ம ராசிகளாயிருந்தால் சுபம்.
பெண் நக்ஷத்திரம் முழு நாளானால் அசுவனி முதல் 3 பர்வத்திலே எண்ண வேணும். 3\4 நக்ஷத்திரமானால் கார்த்திகை முதல் 4, ரேகையிலே எண்ண வேணும் அர்த்த நக்ஷத்திரமானால் மிருகசீர்ஷ முதல் 5 பர்வத்திலே எண்ண வேணும். 2 நக்ஷத்திரங்களும் ஏக ரேகையில் கூடினால் நாடிப் பொருத்தமில்லை.
குறிப்பு
தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ இந்த 5ம் முக்கியம், பிராம்மணர்களுக்கு தினமும், க்ஷத்ரியர்களுக்கு கணமும், வைசியர்களுக்கு ராசியும், சூத்திரர்களுக்கு யோனியும் எல்லா ஜாதியாருக்கும் ரஜ்ஜூம் மிகவும் முக்கியம். இவற்றில் ரஜ்ஜூ உட்பட 5 பொருத்தங்களுக்கு மேல் இருந்தால் விவாகம் செய்யலாம்
மேஷம் - அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய ரிஷபம் - கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2-ஆம் பாதம் முடிய மிதுனம் - மிருகசிரீஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய கடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய சிம்மம் - மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய விருச்சிகம் - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய தனுசு - முலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய மகரம் - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய கும்பம் - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய மீனம் - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய .
ஆலய வழிபாடு
கோவில்களிலுள்ள விக்கிரகங்களிற் சில பார்ப்பதற்குப் பயங்கரமாகத் தோற்றமளிப்பதன் காரணமென்ன?
இறைவன் எம்மால் அறியப்பட முடியாதவாறு ஊர், பேர், உருவம் குணம்குறிகள் இல்லாதவராக இருந்தாலும் ஆன்மாக்களின் மீது கொண்ட அன்பினால் உருவங்களாகக் காட்சியளிக்கின்றார். இறைவனது திருவுருவங்கள் சாதாரணமாகக் கருணை வடிவானவையே. இருப்பினும் தவறிழைக்கின்ற தீயவர்களை நல்வழிப்படுத்துவதற்காக எடுக்கப்படும் தோற்றங்கள் தான் சற்று பயங்கரமாகத் தோற்றமளிக்கின்றன.
இறைவன் கருணை உள்ளங்கொண்டவரெனும் பொழுது சிவபெருமான் தனது காலுக்கடியில் ஒருவரை மிதிப்பது போன்ற நிலை எதற்காக?
இறைவன் எப்பொழுதுமே கருணையுள்ளங் கொண்டவர்தான்;. இருப்பினும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதனையே அவர் கொண்ட உக்கிர தோற்றங்கள் வெளிப்படுத்துகின்றன. சிவபெருமானின் காலுக்கடியிலே இருப்பவரின் பெயர் முயல கன் என்பதாகும். சிவபெருமானிடத்திலே கோபங்கொண்ட தாருகா வனத்து ரிசிகள் வேள்வியொன்றை நிகழ்த்தி, அதன் மூலமாக முயலகனையும் பாம்புகள் மிருகங் களையும் தோற்றுவித்து சிவபெருமானைத் தாக்கி அழிக்கும் வண்ணம் ஏவினார்கள். இதையுணர்ந்த சிவபெருமான் தன்மீது ஏவப்பட்ட மிருகங்களில் மானையும் மழுவையும் தனது இரு கரங்களிலும் தாங்கிக் கொண்டாரென்றும் பாம்புகளைத் தனக்கு அணிகலன்களாக்கிக் கொண்டாரென்றும், சிங்கத்தையும் யானையையும் கொன்று அவற்றின் தோல்களை தனது ஆடைகளாக்கிக் கொண்டாரென்றும் முயலகனை தனது காலின் கீழ் வைத்துக் கொண்டாரென்றும் ஆகம விளக்கம் கூறுகின்றது.
சில கோவில்களிலே கர்ப்பக்கிரகத்தின் புறச்சுவர்களில் விக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றதே? ஆம். கர்ப்பக்கிரகத்தின் புறச்சுவர்களிலே அமைக்கப்பட்டிருக்கின்ற விக்கிரகங்களிலே தெற்கு நோக்கியிருப்பவர் தட்சிணாமூர்த்தியாகும். இவரை யோக தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூரத்தி, ஞான தட்சிணாமூரத்தி, வியாக்கியான தட்சிணாமூரத்தி என்று நான்கு வகையாகக் கூறப்பட்டாலும் பெரும்பாலும் கோவில்களில் வியாக்கியான தட்சிணாமூரத்தியையே காணக் கூடியதாகவுள்ளது.அடுத்து சிவாலயங்களின் பின்புறச் சுவரிலே இருப்பவர் "இலிங் கோற்பவர்". திருமாலும் பிரம்மனும் சிவபெருமானின் அடிமுடி தேடிச் சென்றதனைக் கூறுகின்ற வடிவம்தான் இலிங்கோற்பவ மூர்த்தியாகும். அடுத்து வடக்குப் புறச்சுவரிலே பிரம்மன், துர்க்கை போன்றவர்களுக்கு இடமுண்டு.
இலிங்கோற்பவ மூர்த்தியை குறிப்பிடும் பொழுதுதான் ஞாபகத்துக்கு வருகின்றது அதாவது மானிடர்களுக்கே "நான்" என்ற அகம்பாவம் இருக்கக் கூடாதென்று கூறுகின்ற எமது சமயத்தில் தெய்வங்களாகிய திருமாலும் பிரம்மாவும் தங்களிலே யார் பெரியவரென்று கொண்ட அகம்பாவம் சரியா னதா ?
அகம்பாவம் இருக்கக் கூடாதென்பதை வலியுறுத்தவே இறைவன் இவ்வாறான திருவிளையாடலை நிகழ்த்தினார். அதாவது செல்வத்துக்கு அதிகாரி திருமால் கல்விக்கு அதிகாரி பிரம்மன் எனவே செல்வத்தினாலேயோ அல்லது கல்வியினாலேயோ இறை வனைக்காண முடியாது உண்மையான பக்தியினால் தான் இறைவனைக் காணமுடியுமென்பதை உணா;த்துவதற்காகவே இறைவன் இந்த திருவிளையாடலை நிகழ்த்தினார்.
தண்டேசுவரர் சந்நிதானத்தை வணங்கும் முறை பற்றியும் வெவ்வேறு கருத்து உண்டா?
அதாவது கையிலே தட்டி வணங்குவது பற்றி இரு வேறு கருத்துக்கள் கூறுவார்கள். 1) சண்டேசுவர் இறைவனை தியானித்தபடியே நிட்டையிலே இருப்பாரென்றும், அவ்வாறு இருப்பரை நமது கைகளிலே தட்டி விழிக்க வைத்து வணங்குவதாகக் கூறுவார்கள். 2) ஆலயத்தின் உடமைகள் யாவற்றுக்கும் பொறுப்பானவர் சண்டேசுவரர் தானென்றும் அதனாலே ஆலயத்தின் உடமைகளெதனையும் நாம் எடுத்துச் செல்ல வில்லை என்ற பாவனையாகவே எமது கைகளை ஒன்றுடனொன்று தடவி (காலப் போக்கில் கையில் தட்டுவதாகிவிட்டதாகவும்) வணங்குவதாகவும் கூறுவார்கள். எப்படி வணங்கினாலும் சண்டேசுவரர் கருவறைக்கு மிக அண்மையாக கருவறையை நோக்கி இறைவனையே தியானித்துக் கொண்டிருப்பதால் சண்டேசுவரர் சந்நிதானத்துக்கும் கருவறைக்கும் இடையிலே சென்று இடையூறு செய்யாது போனவழியிலேயே திரும்ப வேண்டுமென்று கூறப்படுகிறது.
இறை வழிபாட்டுக்கும் நவக்கிரக வழிபாட்டுக்கும் சம்பந்தமுண்டா?
கோவிற் கிரியைகளில் சிலசந்தர்ப்பங்களில் நவக்கிரகபூசை முக்கிய இடம்பெறுவதாகவும் புராணங்கள் செவ்வாயை முருகனாகவும், புதனை நாராயணனாகவும் இவ்வாறே ஏனைய கிரகங்களையும் தனித்தனித் தெய்வங்களுடன் தொடர்புபடுத்திக் கூறுவதோடு பெருந்தெய்வங்களே நவக்கிரகவழிபாடு நிகழ்த்தியதாகவும் புராணங்களை மேற்கோள் காட்டிப் பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நவக்கிரகங்களுக்குரிய நிவேதனங்கள் எவை?
சூரியன் ---சூடான சர்க்கரைப் பொங்கல் சந்திரன் --- குளிர்ந்த பால் பாயாசம் செவ்வாய் --- பொங்கல் புதன் --- புளியோதரை குரு ---- தயிர்சாதம் சுக்கிரன் ---- நெய்ப்பொங்கல் சனி ----- எள்ளுசாதம் ராகு ---- உளுந்து சாதம் கேது ---- அன்னம் போன்றவையாகும்.
தீபாராதனைகள் பல்வேறு தீபங்களாலும், உபசாரங்கள் வெவ்வேறு பொருட்களினாலும்(உதாரணமாக சாமரம், குடை)செய்யப்படுவது பற்றி கூறுவீர்களா?
இதன் விளக்கம் மிகவும் பரந்துபட்டதொன்றாகும். இருப்பினும் மிக சுருக்கமாகப் பார்ப்போம்.ஐந்து அடுக்குள்ள அலங்காரதீபம் ஐந்து கலைகளையும் குறிக்கின்றது.மூன்று அடுக்கள்ள தீபம் மூன்று தத்துவங்களையும் குறிக்கின்றது.நாகதீபம் புத்திர விருத்தியின் பொருட்டும்இடபதீபம் பசுவிருத்தியின் பொருட்டும்புருசதீபம் சகல சித்தியின் பொருட்டும்நட்சத்திரதீபம் மல நிவாரணத்தின் பொருட்டும்கும்பதீபமும் அதனுடனிருக்கும் ஐந்து தட்டைகளும் முறையே மலநிவாரணத்தின் பொருட்டும், ஈசானம் முதலிய ஐந்து குணங்கள் பதிதற் பொருட்டும்கற்பூர ஆராத்தியானது ஆன்மா இறைவனுடன் இரண்டறக் கலந்து பேரின்பப் பெருவாழ்வை அடையும் குறிப்பை உணர்த்துவதாக செய்யப்படுகின்றது. அதாவது கற்பூரம் வெண்மை நிறம் கொண்டது. அக்கினி பற்றிக் கொண்டதும் அதன் வடிவாகி முற்றுங் கரைந்து ஒளியிலே சங்கமமாவது போல ஆன்மாவும் ( வெண்மை நிறமான )சாத்வீக குணம் பொருந்தி ஞானாக்கினியாகிய இறையருளில் முற்றாக தன்வடிவிழந்து இறைவ னுடன் இரண்டறக் கலக்கின்ற தத்துவத்தை உணரத்த்தும் பொருட்டும் செய்ய ப்படுகின்றது.மற்றும் கண்ணாடி முதல் ஆலவட்டம் வரை காட்டி ஆராதனை செய்யப்படுவதுகண்ணாடியிலே சிவசக்தியும் அதன் ஒளியில் சிவனும் இருப்பதால் அதைக்கொண்டு ஆராதித்தால் சிவலோக பதவி கிட்டும்.குடையிலே சூரிய மண்டலமும் அதனுடைய காம்பிலே சூரியனும் இருப்பதால் இதனால் ஆராதனை செய்வதனால் மிகுந்த பலத்தையும் அடையமுடியும்.சாமரையிலே வாயுவும் அதன் காம்பிலே கார்க்கோடனும் இருப்பதால் மலநீக்கம் பெற்று திருவருள் கிட்டுமென்று கூறப்படுகிறது.விசிறியிலே சூரியனும் அதன் காம்பிலே பதுமன் என்ற பாம்பும் இருப்பதால் இதுகொண்டு ஆராதனை செய்வதனால் சகல போகங்களும் கிடைக்கும்.ஆலவட்டத்தினாலே ஆராதனை செய்வதனால் தர்க்காயுளும் சகல சுகபோகங்களும் கிடைக்குமென்றும் கூறப்படுகின்றது.
நாம் விநாயகரை வணங்கும் பொழுது எமது தலையிலே குட்டி வணங்குவதன் காரணம் என்ன?
எந்த ஓரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது மத்தகத்திலிருக்கும் அமிர்தமானது சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிசேக மாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது. அத்தோடு முனனொரு காலத்தில் காக்கை உருவெடுத்து விநாயகப் பெருமான் அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்து அதிலிருந்த நீரைக் காவிரி நதியாக ஓடவைத்த பொழுது நிட்டையிலிருந்த அகத்திய முனிவரானவர் கோபங் கொண்டு காக்கையினை விரட்டினார். அப்பொழுது காக்கையானது ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு ஓடியபொழுது முனிவரும் அச்சிறுவனைத் துரத்திச் சென்று அவனது தலையில் குட்டினார். தலையில் குட்டு வாங்கியதும் சிறுவனாக நின்ற விநாயகப் பெருமான் தனது திருச் சொரூபத்தினை அகத்தியருக்குக் காண்பித்தார். உடனே விநாயகப் பெருமானை வணங்கிய அகத்திய முனிவரானவர் தான் செய்த தவறை உணர்ந்து தனது இரண்டு கைகளினாலும் தனது தலையிலே குட்டி தோப்புக்கரணம் செய்து தன்னை மன்னித்தருளுமாறு விநாயகரை வேண்டியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இதன் பாவனையாகவே நாமும் தலையிலே குட்டி தோப்புக்கரணமிட்டு விநாயகரை வணங்குகின்றோம். விநாயகரை வணங்கி ஆரம்பிக்கின்ற வேலைகள் யாவும் தடையின்றி நிறைவுபெறும் என்பதனால்தான் கோவிற்கிரிகைள் உட்பட எல்லாச்சந்தர்ப்பங்களிலும் விநாயகர் வழிபாடு முதலிடத்தை வகிக்கின்றது.
ஆலயங்களில் எங்கே எவ்வாறு விழுந்து வணங்கல் வேண்டும்?
ஆலயங்களிலே விழுந்து வணங்கும் பொழுது எப்பொழுதும் பலிபீடம் கொடிமரத்துக்கு அப்பால் வடதிசை நோக்கி தலையும் தென்திசை நோக்கி காலும் இருக்கும்படியாக ஆண்கள் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்து வணங்கலாம்.