அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வ‌ர‌ன் திருக்கோயில்,-திரு அண்ணாமலை ஜோதிடம்,-விரத நாட்கள் - 2009 ஜனவரி: 7 -கிருத்திகை.25-அமாவாசை. 10 - பவுர்ணமி. 14 - சங்கடஹர சதுர்த்தி. 8, 23 - பிரதோஷம். பிப்ரவரி: 3 - கிருத்திகை. 24 - அமாவாசை. 9 - பவுர்ணமி. 12 - சங்கடஹர சதுர்த்தி. 7, 22 - பிரதோஷம். மார்ச்: 3, 30 - கிருத்திகை. 26 - அமாவாசை. 10 - பவுர்ணமி. 14 - சங்கடஹர சதுர்த்தி. 8, 24 - பிரதோஷம். ஏப்ரல்: 26 - கிருத்திகை. 24 - அமாவாசை. 9 - பவுர்ணமி. 13 - சங்கடஹர சதுர்த்தி. 7, 22 - பிரதோஷம். மே: 24 - கிருத்திகை. 24 - அமாவாசை. 9 - பவுர்ணமி. 12 - சங்கடஹர சதுர்த்தி. 6, 22 - பிரதோஷம்.ஜூன்: 20 - கிருத்திகை. 22 - அமாவாசை. 7 - பவுர்ணமி. 11 - சங்கடஹர சதுர்த்தி. 5, 20 - பிரதோஷம். ஜூலை: 17 - கிருத்திகை. 22 - அமாவாசை. 7 - பவுர்ணமி. 11 - சங்கடஹர சதுர்த்தி. 4, 19 - பிரதோஷம். ஆகஸ்ட்: 14 - கிருத்திகை. 20 - அமாவாசை. 5 - பவுர்ணமி. 9 - சங்கடஹர சதுர்த்தி. 3, 18 - பிரதோஷம். செப்டம்பர்: 10 - கிருத்திகை. 18 - அமாவாசை. 4 - பவுர்ணமி. 8 - சங்கடஹர சதுர்த்தி. 2, 16 - பிரதோஷம். அக்டோபர்: 7 - கிருத்திகை. 17 - அமாவாசை. 3 - பவுர்ணமி. 7 - சங்கடஹர சதுர்த்தி. 1, 15, 31 - பிரதோஷம். நவம்பர்: 4 - கிருத்திகை. 16 - அமாவாசை. 2 - பவுர்ணமி. 5 - சங்கடஹர சதுர்த்தி. 14, 29 - பிரதோஷம். டிசம்பர்: 1, 28 - கிருத்திகை. 16 - அமாவாசை. 2, 31 - பவுர்ணமி. 5 - சங்கடஹர சதுர்த்தி. 13, 29 - பிரதோஷம்.

வலைப்பதிவில் தேடு

10.4.09

மகா சிவராத்திரி அருள்மிகுஸ்ரீபாலீஸ்வ‌ர‌ன்திருக்கோயில்





மகா சிவராத்திரி அருள்மிகுஸ்ரீபாலீஸ்வ‌ர‌ன்திருக்கோயில்



தேவர்களுக்காகச் சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்ததும் பார்வதி தேவி பயந்து நடுங்கியவாறு தன் கைகளை எடுத்துக் கொண்டாள். பார்வதி தேவியின் பயத்தைப் போக்க நினைத்த சிவபெருமான் நெற்றிக்கண் நெருப்பினைக் குளிர் நிலவாக மாற்றி அம்பிகையை ஆட்கொண்டார்.உலகைக் காப்பதற்காக பாற்கடலில் விளைந்த அமுதத்தினைச் கிவபெருமான் உண்ணவே, பெருமானுக்கு நஞ்சு ஏதும் கேடு விளைவிக்குமோ என்று அஞ்சிய தேவர்கள் இரவு முழுவதும் விழித்திருந்த நாளே சிவராத்திரி என்றும் கூறுவார்கள்.பிரம்மனும் திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் எனப் போராட, அதனால் ஆணவ இருள் உலகைச் சூழ்ந்ததாகவும், அந்த இருளினைக் கண்டு விண்ணிலுள்ள தேவர்கள் அஞ்சவே அவர்களைக் காக்க சிவபெருமான் இலிங்கமாகத் தோன்றி சுடர்விட்டு அனைவருக்கும் அறிவூட்டிய நாளே சிவராத்திரி என்றும் கூறுவர்.சிவராத்திரியின் மகிமை பற்றிய ஒரு கதையும் உண்டு. ஒரு முறை வேடுவன் ஒருவன் காட்டிலே வேட்டையாடச் சென்ற போது புலி ஒன்று துரத்தவே, ஏற்கனவே கையிலிருந்த ஆயுதங்களைத் தொலைத்து விட்டதனால் தனது உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் அருகிலிருந்த வில்வமரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் விடவில்லை. மரத்தடியிலேயே படுத்துக் கொண்டது. மாலையாகியும் அவ்விடத்தை விட்டுப் புலி செல்லவேயில்லை. இதைக்கண்ட வேடுவன், இரவானதும் தூக்கத்தில் கீழே விழுந்துவிட்டால் புலிக்கு இரையாகி விடுவோமென அஞ்சி தூக்கம் வராமலிருக்க தாம் இருந்த வில்வமரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போடலானான். அந்த இலைகளெல்லாம் மரத்தின் கீழேயிருந்த சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்வது போன்று இரவு முழுவதும் தொடர்ந்து விழுந்து கொண்டேயிருந்தது. அன்றைய தினம் சிவராத்திரி தினமாகும். அந்த இரவெல்லாம் கண்விழித்து அறிந்தோ, அறியாமலோ சிவபூசை செய்த காரணத்தால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது. சிவபெருமான் அந்த வேடுவன் முன்னால் காட்சியளித்து அவனது பாவங்களை நீக்கி அவனுக்கு முக்திகொடுத்தார்.சிவராத்திரி முழுவதும் தூங்காமல் கண்விழித்து நான்கு காலப்பூசை செய்து சிவபெருமானை வணங்குபவர்களுக்கு சகல போகங்களும் கிடைப்பது மட்டுமில்லாமல் முக்தியும் கிடைக்குமென்று சொல்லப்படுகிறது. சிவராத்திரியன்று ஒரு முறை பஞ்சாட்சரம் உச்சரித்தால், ஏனைய நாட்களில் 100 முறை பஞசாட்சரம் ஜெபித்த பலன் கிடைக்கும்.வைஷ்ணவர்களும் இவ்விரதத்தை அனுட்டிக்க வேண்டுமென்று கருடபுராணம் கூறுகிறது.