அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வ‌ர‌ன் திருக்கோயில்,-திரு அண்ணாமலை ஜோதிடம்,-விரத நாட்கள் - 2009 ஜனவரி: 7 -கிருத்திகை.25-அமாவாசை. 10 - பவுர்ணமி. 14 - சங்கடஹர சதுர்த்தி. 8, 23 - பிரதோஷம். பிப்ரவரி: 3 - கிருத்திகை. 24 - அமாவாசை. 9 - பவுர்ணமி. 12 - சங்கடஹர சதுர்த்தி. 7, 22 - பிரதோஷம். மார்ச்: 3, 30 - கிருத்திகை. 26 - அமாவாசை. 10 - பவுர்ணமி. 14 - சங்கடஹர சதுர்த்தி. 8, 24 - பிரதோஷம். ஏப்ரல்: 26 - கிருத்திகை. 24 - அமாவாசை. 9 - பவுர்ணமி. 13 - சங்கடஹர சதுர்த்தி. 7, 22 - பிரதோஷம். மே: 24 - கிருத்திகை. 24 - அமாவாசை. 9 - பவுர்ணமி. 12 - சங்கடஹர சதுர்த்தி. 6, 22 - பிரதோஷம்.ஜூன்: 20 - கிருத்திகை. 22 - அமாவாசை. 7 - பவுர்ணமி. 11 - சங்கடஹர சதுர்த்தி. 5, 20 - பிரதோஷம். ஜூலை: 17 - கிருத்திகை. 22 - அமாவாசை. 7 - பவுர்ணமி. 11 - சங்கடஹர சதுர்த்தி. 4, 19 - பிரதோஷம். ஆகஸ்ட்: 14 - கிருத்திகை. 20 - அமாவாசை. 5 - பவுர்ணமி. 9 - சங்கடஹர சதுர்த்தி. 3, 18 - பிரதோஷம். செப்டம்பர்: 10 - கிருத்திகை. 18 - அமாவாசை. 4 - பவுர்ணமி. 8 - சங்கடஹர சதுர்த்தி. 2, 16 - பிரதோஷம். அக்டோபர்: 7 - கிருத்திகை. 17 - அமாவாசை. 3 - பவுர்ணமி. 7 - சங்கடஹர சதுர்த்தி. 1, 15, 31 - பிரதோஷம். நவம்பர்: 4 - கிருத்திகை. 16 - அமாவாசை. 2 - பவுர்ணமி. 5 - சங்கடஹர சதுர்த்தி. 14, 29 - பிரதோஷம். டிசம்பர்: 1, 28 - கிருத்திகை. 16 - அமாவாசை. 2, 31 - பவுர்ணமி. 5 - சங்கடஹர சதுர்த்தி. 13, 29 - பிரதோஷம்.

வலைப்பதிவில் தேடு

7.6.09

சிவபுராணம்

தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.
சிவபுராணம் என்று பெயர் கொண்ட இப்பதிகம் சீவ புராணமல்லவா பேசுகின்றது ? ஏன் சிவபுராணம் எனப் பெயர் பெற்றது ? மாணிக்க வாசகப் பெருமான் பரம்பொருளாகிய சிவபெருமானைப் பலவாறெல்லாம் விளித்து அவர் பூவார் திருவடிகளுக்குத் தம்முடைய உளமார்ந்த வணக்கங்களைக் கூறித் துவங்குகிறார். சீவனான உயிர் மும்மலச் சேற்றில் அகப்பட்டுத் திகைத்து நிற்கும் காலமும், அச்சீவனுக்கு சிவபெருமான் திருவருளால் ஏற்படும் மேம்பாடுகளையும் கூறி இறுதியாக அச்சிவபெருமானின் திருவடிக்குச் செல்லும் பெருநிலையை நமக்குக் காட்டுகின்றார். சீவன் மலச்சுழியில் சிக்குண்டு இருக்கும் தாழ்நிலையிலிருந்து, சிவனார் பெருங்கருணையால் சிவகதி அடையும் தன்னிகரற்ற பெருநிலை பற்றிக் கூறுவதால் இது சிவபுராணமே.
திருவாசகம் பெரிதும் எளிய நடையைக் கொண்டதாக இருப்பது காரணமாக உரையின் துணையின்றியே அன்பர்கள் படித்துப் பயன்பெறுவது. எனினும் சந்தி பிரித்து தினமும் பேசும் மொழியில் வழக்கத்தில் இப்போது இல்லாத சில சொற்களுக்குப் பொருளும், அங்கங்கே தொடர்புடைய சில கருத்துக்கள் குறிப்பதுவும் அன்பர்களுக்கு பயன்படக்கூடும் என்ற கருத்துடன் இவ்வுரை வரையப்பட்டுள்ளது. நேயத்தே நின்ற நிமலனார் பிழைகளை மன்னித்தும் தவிர்த்தும் அருள அவர்தம் செம்மலரடிகளுக்குப் போற்றுதல்கள்.