12.4.09
பிரதோஷ விரதம் அருள்மிகுஸ்ரீபாலீஸ்வரன்திருக்கோயில்
பிரதோஷ விரதம் (திரயோதசி)
தேய்பிறை, வளர்பிறை என இரண்டு பக்ஷங்களிலும் வரும் அமாவாசை, பௌர்ணமி இரண்டிற்கும் பிறகு வரும் பதின்மூன்றாம் நாளிலே இப்பிரதோஷ விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. இவ்விரதம் மாலை நேரத்திற்குரியது.
சூரிய அஸ்தமனத்திற்கு முன்னுள்ள மூன்றேமுக்கால் நாளிகையும் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னுள்ள மூன்றேமுக்கால் நாளிகையும் (பிற்பகல் நாலரை மணியிலிருந்து இரவு ஏழரை மணிவரை ) பிரதோஷகாலம் எனப்படும். இந்நேரத்தில் சிவபெருமானை வணங்கி வழிபட வேண்டும். இவ்விரத காலத்தில் அன்றாடக் கடமைகளைச் செய்து, பகல் உணவு கொள்ளாமல் நீராடி மாலை வழிபாடுகளைச் செய்து சிவாலயம் சென்று பிரதோஷகாலப் பூசையைத் தரிசிக்க வேண்டும்.
பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்து பிறகு சோமசூத்திரப் பிரதக்ஷிணம் செய்ய வேண்டும். " சோமசூத்திரப் பிரதக்ஷிணம்" என்னும் வழிபாட்டு முறை என்பது முதலில் இடபதேவரை வணங்கி, இடமாகச் சென்று சண்டேஸ்வரரைத் தரிசித்து, பின் திரும்பி வந்து இடபதேவரை வணங்கி, வலப்பக்கமாகக் கோமுகை (பசுவின் முகம் போன்று செய்யப்பட்ட தீர்த்தம் விழும் பகுதி)வரை சென்று, மீண்டும் திரும்பி வந்து இடபதேவரை வணங்கி, மறுபடியும் இடமாகச் சென்று, சண்டேஸ்வரரை வணங்கி, இடபதேவரை இம்முறை தரிசியாது வலமாகக் கோமுகைவரை சென்று திரும்பி, இடபதேவரைத் தரிசியாமல் இடமாகச் சென்று, சண்டேஸ்வரரை வணங்கிப், பின் திரும்பி வந்து இடபதேவரைத் தரிசித்து, அவரது இரு கொம்புகளின் ஊடாக சிவலிங்கப் பெருமானை வணங்க வேண்டும் என்னும் விதிக்கமைய வழிபடுதலாகும். கோமுகையைக் கடவாது திருக்கோவில் வலம்வரும் இந்த சோமசூத்திரப் பிரதக்ஷிணம் பிரதோஷகால வழிபாட்டில் மிகச் சிறப்பிடம் பெறுகின்றது.
பிரதோஷ காலத்தில் நந்தியம் பெருமானுக்குச் செய்யும் "காப்பரிசி” நிவேதனம் சிறப்பானது. பச்சரிசியையும், பயற்றம் பருப்பையும் நீரில் நன்கு ஊறவைத்து வடிகட்டி அத்துடன் வெல்லமும், தேங்காய்ப்பூவும் சேர்த்துச் செய்வதாகும். பிரதோஷ கால உணவாக இக்காப்பரிசியையோ அல்லது சர்க்கரைப் பொங்கலையோ சாப்பிடலாம். பிரதோஷ காலத்தில் வீண் வார்த்தை பேசாது மௌனமாகத் தியானம் செய்தல் வேண்டும்.
சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை என்ற இம்மாதங்களுள் வரும் சனிப்பிரதோஷத்தில் (பிரதோஷம் சனிக்கிமையில் வரும்போது) விரதத்தை ஆரம்பித்து ஒரு வருடம் முறையாகக் கடைப்பிடித்துப் பின்னர் பூர்த்தி செய்தல் வேண்டும். தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புவோர் விரதத்தைத் தொடரலாம். ஆனால் ஒவ்வொரு வருடமும் விரத உத்தியாபனம் செய்தல் வேண்டும். இவ்விரதத்தைக் கைக்கொள்ளுவோருக்குக் கடன், வறுமை, நோய் அவமிருத்து, பயம், மரணவேதனை நீங்கும்.
”இரண நல்குர(வு), இரும்பாவம், இரும்பசி, உரோகம் அரணறும் பயம், கிலேசம், கேதம், அவமிருத்து மரண வேதனை இவையெல்லாம் அகற்றென வணங்கிப் புரண நாதனைப் பிரதோடத்தில் போற்றிடத் தகுமால்"
இடுகையிட்டது
paleeswarantemple@gmail.com
10.4.09
அருள் மிகு ஸ்ரீ பாலீஸ்வரர் திருக்கோயில் படங்கள்
http://paleeswarantemple.blogspot.com/

.gif)

கீழ்ப்பிரிவுக்கான தேவாரங்கள்
பண்-காந்தார பஞ்சமம்
1. சொற்றுணை வேதியன் சோதி வானவன்பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பா;ய்ச்சினும்நற்றுணையாவது நமச்சி வாயவே.
பண் - நட்டபாடை
2. தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிகாடுடைய சுடலைப்பொடி பூசியோர் உள்ளங்கவர் கள்வன்ஏடுடைய மலரால் உனை நாட்பணிந் தேத்த அருள் செய்தபீடுடைய பிரமா புரமேவிய பெம்மான் இவனன்றே.
பண்-காந்தார பஞ்சமம்
3. பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரைஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்கோவினுக் கருங்கலம் கோட்டமில்லதுநாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே.
பண்-காந்தாரம்
4. மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறுசுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறுதந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறுசெந்துவர் வாயுமைபங்கன் திரு வாலவாயான் திருநீறே.
பண் - நட்டபாடை
5. உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழமண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமுழ வதிரும்அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.
மத்தியபிரிவுக்கான தேவாரங்கள்
பண் - நட்டபாடை
1. அங்கமும் வேதமு மோதுநாவர்அந்தணர் நாளுமடிபரவமங்குல் மதிதவழ் மாடவீதிமருக நிலாவிய மைந்த சொல்லாய்செங்கய லார்புனற் செல்வ மல்குசீர்கொள் செங்காட்டங் குடியதனுள்கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்கணபதி யீச்சரம் காமுறவே.
பண் - நட்டபாடை
2. நத்தார்படை ஞானன்பசு வேறின் நினைக் கவிழ்வாய்மத்தம்மத யானைஉரி போர்த்த மணவாளன்பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல்செத்தாரெலும் பணிவான்திரு கேதீச்சரத்தானே.
பண்-காந்தாரம்
3. மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும்பாடிபோதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போதுகாதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்கண்டே னவர் திருப் பாதம் கண்டறியாதன கண்டேன்.
பண்-காந்தார பஞ்சமம்
4. இடரினும் தளரினும் எனதுறு நோய்தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன்கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சைமிடறினில் அடக்கிய வேதியனேஇதுவோ எமை ஆளுமா றீவ தொன் றெமக் கில்லையேஅதுவோ வுனதின் னருள் ஆவடுறை அரனே
பண்- புறநீர்மை
5. என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமேயிருங்கடல் வையத்துமுன்னம் நீபுரி நல்வினைப் பயனிடைமுழுமணித் தரளங்கள்மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழிவாணனை வாயாரப்பன்னி யாதரித் தேத்தியூம் பாடியூம்வழிபடும் அதனாலே.
மேற்பிரிவுக்கான தேவாரங்கள்
பண் - காந்தார பஞ்சமம்
1. பரவும் பரிசொன்று அறியேன் நான் கண்டே உம்மை பயிலாதே இரவும் பகலும் நினைந்தாலும் ஏய்த்த நினைய மாட்டேனா கரவில் அருவிக் கமுகுன்ன தெங்கம் குலைக்கு கரும்பாலை அரவம் திரை காவிரிக் கோட்டத்து ஐயாருடைய அடிகேளே
பண் - நட்டபாடை
2. பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடை அவனிறை இறையணி வளையினை முலயவள் இணைவள தௌpலுடை இடவகை கறையணி பொழிநிறைய வயலணி கழுமல மமர்கன உருவினல் நறையணி மலர்நறுவிரை புல்கு நலம் வலி கழல் தொழல் மருவுமே. பண் - கொல்லி
3. தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்சார்கினுந் தொண்டர் தருகிலாப்பொய்மை யாளரைப் பாடாதே யெந்தைபுகழிர் பாடுமின் புலவீர்காள்இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்ஏத்த லாமிடர் கெடலுமாம்அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்குயாதும் ஐயூற வில்லையே.
பண் - நட்டபாடை
4. கூற்றாயின வாறு விலக்ககிலீர்கொடுமைபல செய்தன நானறியேன்ஏற்றாயடிக் கேயிர வும்பகலும்பிரியாது வணங்குவ னெப்பொழுதும்தோற்றாதென் வயிற்றின் அகம்படியேகுடரோடு துடக்கி முடக்கியிடஆற்றேனடி யேனதி கைக்கெடிலவீரட்டா னத்துறை யம்மானே.
பண் - செந்துருத்தி
5. மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதேமூளா தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடிஆளா யிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங்கிருப்பின் திருவாரூர் வாழ்ந்து போதீரேஅதிமேற்பிரிவிற்கான தேவாரங்கள்
பண்-கௌசிகம்
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கிஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவதுநாதன் நாமம் நமச்சி வாயவே.
பண்-புறநீர்மை
தாயினும் நல்ல தலைவரென் றடியார்தம்மடி போற்றிசைப் பார்கள்வாயினும் மனத்தும் மருவிநின் றகலாமாண்பினர் காண்பல வேடர்நோயிலும் பிணியும் தொழி லர்பால் நீக்கிநுழைதரு நூலினர் ஞாலம்கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்தகோணமாமலை அமர்ந்தாரே.
பண்-அத்தாளிக்குறிஞ்சி
நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானைஉறும்பொரு ளாற்சொன்ன வொண்தமிழ் வல்லார்க்கறும்பொழி பாவம் அவலம் இலரே.
பண்-புறநீர்மை
அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுதஅவனைக் காப்பது காரண மாகவந்த காலன்றன் ஆருயி ரதனைவவ்வி னாய்க்குன்றன் வண்மைகண் டடியேன்எந்தை நீஎனை நமன்தமர் நலியின்இவன்மற் றென்அடி யான்என விலக்கும்சிந்தை யால்வந்துன் திருவடி அடைந்தேன்செழும்பொழில்திருப் புன்கூர் உளானே.
பண்-தக்கராகம்
கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனைஅப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கிஎப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே.

மகா சிவராத்திரி அருள்மிகுஸ்ரீபாலீஸ்வரன்திருக்கோயில்

மகா சிவராத்திரி அருள்மிகுஸ்ரீபாலீஸ்வரன்திருக்கோயில்
தேவர்களுக்காகச் சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்ததும் பார்வதி தேவி பயந்து நடுங்கியவாறு தன் கைகளை எடுத்துக் கொண்டாள். பார்வதி தேவியின் பயத்தைப் போக்க நினைத்த சிவபெருமான் நெற்றிக்கண் நெருப்பினைக் குளிர் நிலவாக மாற்றி அம்பிகையை ஆட்கொண்டார்.உலகைக் காப்பதற்காக பாற்கடலில் விளைந்த அமுதத்தினைச் கிவபெருமான் உண்ணவே, பெருமானுக்கு நஞ்சு ஏதும் கேடு விளைவிக்குமோ என்று அஞ்சிய தேவர்கள் இரவு முழுவதும் விழித்திருந்த நாளே சிவராத்திரி என்றும் கூறுவார்கள்.பிரம்மனும் திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் எனப் போராட, அதனால் ஆணவ இருள் உலகைச் சூழ்ந்ததாகவும், அந்த இருளினைக் கண்டு விண்ணிலுள்ள தேவர்கள் அஞ்சவே அவர்களைக் காக்க சிவபெருமான் இலிங்கமாகத் தோன்றி சுடர்விட்டு அனைவருக்கும் அறிவூட்டிய நாளே சிவராத்திரி என்றும் கூறுவர்.சிவராத்திரியின் மகிமை பற்றிய ஒரு கதையும் உண்டு. ஒரு முறை வேடுவன் ஒருவன் காட்டிலே வேட்டையாடச் சென்ற போது புலி ஒன்று துரத்தவே, ஏற்கனவே கையிலிருந்த ஆயுதங்களைத் தொலைத்து விட்டதனால் தனது உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் அருகிலிருந்த வில்வமரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் விடவில்லை. மரத்தடியிலேயே படுத்துக் கொண்டது. மாலையாகியும் அவ்விடத்தை விட்டுப் புலி செல்லவேயில்லை. இதைக்கண்ட வேடுவன், இரவானதும் தூக்கத்தில் கீழே விழுந்துவிட்டால் புலிக்கு இரையாகி விடுவோமென அஞ்சி தூக்கம் வராமலிருக்க தாம் இருந்த வில்வமரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போடலானான். அந்த இலைகளெல்லாம் மரத்தின் கீழேயிருந்த சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்வது போன்று இரவு முழுவதும் தொடர்ந்து விழுந்து கொண்டேயிருந்தது. அன்றைய தினம் சிவராத்திரி தினமாகும். அந்த இரவெல்லாம் கண்விழித்து அறிந்தோ, அறியாமலோ சிவபூசை செய்த காரணத்தால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது. சிவபெருமான் அந்த வேடுவன் முன்னால் காட்சியளித்து அவனது பாவங்களை நீக்கி அவனுக்கு முக்திகொடுத்தார்.சிவராத்திரி முழுவதும் தூங்காமல் கண்விழித்து நான்கு காலப்பூசை செய்து சிவபெருமானை வணங்குபவர்களுக்கு சகல போகங்களும் கிடைப்பது மட்டுமில்லாமல் முக்தியும் கிடைக்குமென்று சொல்லப்படுகிறது. சிவராத்திரியன்று ஒரு முறை பஞ்சாட்சரம் உச்சரித்தால், ஏனைய நாட்களில் 100 முறை பஞசாட்சரம் ஜெபித்த பலன் கிடைக்கும்.வைஷ்ணவர்களும் இவ்விரதத்தை அனுட்டிக்க வேண்டுமென்று கருடபுராணம் கூறுகிறது.
இடுகையிட்டது
paleeswarantemple@gmail.com
அருள்மிகுஸ்ரீபாலீஸ்வரன்திருக்கோயில் சனி பெயர்ச்சி
ஸ்ரீ சனிபகவான் பெயர்ச்சி:விரோதி வருஷம் புரட்டாசி மாதம் 10 நாள்(26/9/2009)சனிக்கிழமை பகல் 3:22 க்கு உத்திரம் 2ம் பாதம் கன்னி இராசியில் ஸ்ரீ சனிபகவான் பெயர்ச்சி அடைகிறார். மேலும் விவரம் வேண்டுமா? அனுகவும் sankarngpd@gmail.com paleeswarantemple@gmail.com 

இடுகையிட்டது
paleeswarantemple@gmail.com
4.4.09
அருள்மிகுஸ்ரீபாலீஸ்வரன்திருக்கோயில்: பஞ்சாங்கம்
அருள்மிகுஸ்ரீபாலீஸ்வரன்திருக்கோயில்: பஞ்சாங்கம்
பாலீஸ்வரன் திருக்கோயில் பாலீஸ்வரன் திருக்கோயில்
பாலீஸ்வரன் திருக்கோயில் பாலீஸ்வரன் திருக்கோயில்
இடுகையிட்டது
paleeswarantemple@gmail.com
பஞ்சாங்கம்
"பஞ்சாங்கம்"
சு/சே/சோ/லா:அசுவனி=ஆண்குதிரை/பக்ஷிஇராஜாளி/எட்டிமரம்/பாத ரஜ்ஜு/தேவகனம்
லி/லு/லோ/:பரணி=ஆண்யானை/பக்ஷிகாக்கை/நெல்லிமரம்/தொடைரஜ்ஜு/மனுஷகனம்
அ/இ/ஊ/ஏ:கிருத்திகை=பெண்ஆடு/பக்ஷிமயில்/அத்திமரம்/வயறுரஜ்ஜு/ராக்ஷஸகனம்
ஓ/வ/வி/வூ:ரோகிணி=ஆண்நாகம்/பக்ஷிஆந்தை/நாவல்மரம்/கழுத்துரஜ்ஜு/ மனுஷகனம்
வே/வோ/கா/கி:மிருகசிரிஷம்=பெண்சாரை/பக்ஷிகோழி/கருங்காலி/சிரசுரஜ்ஜு/தேவம்கனம்
கு/க/ங/ச்/சா:திருவாதிரை=ஆண்நாய்/பக்ஷிசிட்டுக்குருவி/செங்கருமரம்/கழுத்துரஜ்ஜு/மனுஷகனம்
கே/கோ/ஹ/ஹி:புனர்பூசம்/பெண்பூனை/பக்ஷிஅன்னம்/மூங்கில்மரம்/வயறுரஜ்ஜு/தேவகனம்
இடுகையிட்டது
paleeswarantemple@gmail.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)