அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வ‌ர‌ன் திருக்கோயில்,-திரு அண்ணாமலை ஜோதிடம்,-விரத நாட்கள் - 2009 ஜனவரி: 7 -கிருத்திகை.25-அமாவாசை. 10 - பவுர்ணமி. 14 - சங்கடஹர சதுர்த்தி. 8, 23 - பிரதோஷம். பிப்ரவரி: 3 - கிருத்திகை. 24 - அமாவாசை. 9 - பவுர்ணமி. 12 - சங்கடஹர சதுர்த்தி. 7, 22 - பிரதோஷம். மார்ச்: 3, 30 - கிருத்திகை. 26 - அமாவாசை. 10 - பவுர்ணமி. 14 - சங்கடஹர சதுர்த்தி. 8, 24 - பிரதோஷம். ஏப்ரல்: 26 - கிருத்திகை. 24 - அமாவாசை. 9 - பவுர்ணமி. 13 - சங்கடஹர சதுர்த்தி. 7, 22 - பிரதோஷம். மே: 24 - கிருத்திகை. 24 - அமாவாசை. 9 - பவுர்ணமி. 12 - சங்கடஹர சதுர்த்தி. 6, 22 - பிரதோஷம்.ஜூன்: 20 - கிருத்திகை. 22 - அமாவாசை. 7 - பவுர்ணமி. 11 - சங்கடஹர சதுர்த்தி. 5, 20 - பிரதோஷம். ஜூலை: 17 - கிருத்திகை. 22 - அமாவாசை. 7 - பவுர்ணமி. 11 - சங்கடஹர சதுர்த்தி. 4, 19 - பிரதோஷம். ஆகஸ்ட்: 14 - கிருத்திகை. 20 - அமாவாசை. 5 - பவுர்ணமி. 9 - சங்கடஹர சதுர்த்தி. 3, 18 - பிரதோஷம். செப்டம்பர்: 10 - கிருத்திகை. 18 - அமாவாசை. 4 - பவுர்ணமி. 8 - சங்கடஹர சதுர்த்தி. 2, 16 - பிரதோஷம். அக்டோபர்: 7 - கிருத்திகை. 17 - அமாவாசை. 3 - பவுர்ணமி. 7 - சங்கடஹர சதுர்த்தி. 1, 15, 31 - பிரதோஷம். நவம்பர்: 4 - கிருத்திகை. 16 - அமாவாசை. 2 - பவுர்ணமி. 5 - சங்கடஹர சதுர்த்தி. 14, 29 - பிரதோஷம். டிசம்பர்: 1, 28 - கிருத்திகை. 16 - அமாவாசை. 2, 31 - பவுர்ணமி. 5 - சங்கடஹர சதுர்த்தி. 13, 29 - பிரதோஷம்.

வலைப்பதிவில் தேடு

7.6.09

சிவபுராணம் -திருச்சிற்றம்பலம்-2

திருச்சிற்றம்பலம்
  1. வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
  2. பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
  3. புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
  4. கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
  5. சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

பொருள்:

என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும்.

பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும்.

தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள) பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும்.

கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும்.

தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும் பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.

சிவபுராணம் -திருச்சிற்றம்பலம்-1

திருச்சிற்றம்பலம்
  1. நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
  2. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
  3. கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
  4. ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
  5. ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

பொருள்:

நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.

கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.

திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க.

தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.

ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.

அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வ‌ர‌ன் திருக்கோயில்,புதுகும்மிடிப்பூண்டி-திரு அண்ணாமலை ஜோதிடம்,கும்மிடிப்பூண்டி- S.சங்கர் குருக்கள்

சிவபுராணம்

தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.
சிவபுராணம் என்று பெயர் கொண்ட இப்பதிகம் சீவ புராணமல்லவா பேசுகின்றது ? ஏன் சிவபுராணம் எனப் பெயர் பெற்றது ? மாணிக்க வாசகப் பெருமான் பரம்பொருளாகிய சிவபெருமானைப் பலவாறெல்லாம் விளித்து அவர் பூவார் திருவடிகளுக்குத் தம்முடைய உளமார்ந்த வணக்கங்களைக் கூறித் துவங்குகிறார். சீவனான உயிர் மும்மலச் சேற்றில் அகப்பட்டுத் திகைத்து நிற்கும் காலமும், அச்சீவனுக்கு சிவபெருமான் திருவருளால் ஏற்படும் மேம்பாடுகளையும் கூறி இறுதியாக அச்சிவபெருமானின் திருவடிக்குச் செல்லும் பெருநிலையை நமக்குக் காட்டுகின்றார். சீவன் மலச்சுழியில் சிக்குண்டு இருக்கும் தாழ்நிலையிலிருந்து, சிவனார் பெருங்கருணையால் சிவகதி அடையும் தன்னிகரற்ற பெருநிலை பற்றிக் கூறுவதால் இது சிவபுராணமே.
திருவாசகம் பெரிதும் எளிய நடையைக் கொண்டதாக இருப்பது காரணமாக உரையின் துணையின்றியே அன்பர்கள் படித்துப் பயன்பெறுவது. எனினும் சந்தி பிரித்து தினமும் பேசும் மொழியில் வழக்கத்தில் இப்போது இல்லாத சில சொற்களுக்குப் பொருளும், அங்கங்கே தொடர்புடைய சில கருத்துக்கள் குறிப்பதுவும் அன்பர்களுக்கு பயன்படக்கூடும் என்ற கருத்துடன் இவ்வுரை வரையப்பட்டுள்ளது. நேயத்தே நின்ற நிமலனார் பிழைகளை மன்னித்தும் தவிர்த்தும் அருள அவர்தம் செம்மலரடிகளுக்குப் போற்றுதல்கள்.

12.4.09

அருள்மிகுஸ்ரீபாலீஸ்வ‌ர‌ன்திருக்கோயில் - ஆலய வழிபாடு

இறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா?

இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தாலும் வெய்யிலிலே ஒரு கடதாசியையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமேயன்றி தீப்பற்றமாட்டாது. ஆனால் அதே வெய்யிலிலே ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் கடதாசியோ அல்லது பஞ்சோ தீப்பற்றி எரியும். அதாவது எங்கும் பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை சூரியகாந்தக் கண்ணாடியானது சேர்த்து ஒன்றாக்கி அனுப்புவது போல எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள..,
இறையருளானது மந்திர யந்திர சக்திகளினாலே சேர்த்து ஒன்றாக திரட்டி ஆலயங்களிலே வைக்கப்பட்டுள்ளதென்றும்எனவே ஆலயங்களிலே சென்றுவணங்கும் பொழுது நாம் செய்த ஊழ்வினைகள் யாவும் வெதும்பி அவற்றின் வேகம் குறைந்து போய்விடுமென்றும் வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.


பஞ்சபூதங்களுமே இறைவன் தான் என்று கூறுவதன் பொருள் யாது?

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றிநீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றிதீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றிவளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றிவெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றிஇதன் பொருள்:-நிலம் ----- (சப்தம்,பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் 5 குணங்கள் கொண்டது) நீர் ----- (சப்தம், பரிசம், ரூபம், ரசம் என்னும் 4 குணங்கள் கொண்டது)தீ ----- (சப்தம்இ பரிசம், ரூபம் என்னும் 3 குணங்கள் கொண்டது)காற்று ----- (சப்தம், பரிசம் என்னும் 2 குணங்கள் கொண்டது)ஆகாயம் ----- (சப்தம் என்னும் ஒரே குணம் கொண்டது)

கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிபவர் என்பதால் அவர் எங்குமே வியாபித்திருக்கும் பொழுது உருவ வழிபாடு எதற்காக?

இறைவன் உருவம் இல்லாதவராயினும் நாம் அவரை நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவவடிவங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. யோகிகள், ஞானிகளல்லாத சாதாரண மனிதர்கள் மத்தியிலே அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு உருவவழிபாடு இன்றியமையாததாகும். இப்படியான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் குறிப்பவையாக அமைவதால் ஆரம்பத்தில் இறைவனைப்பற்றி அறிந்து கொள்ள உருவவழிபாடு முக்கியமானதாகின்றது.

"இறைவன் ஒருவனே" என்று சொல்லப்படும் பொழுது வெவ்வேறு உருவங்களில் சொல்லப்படுவது எவ்வாறு?

ஆம். இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட வராயினும், சத்தியினாலே பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம். இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக தங்கம் ஒன்று தானென்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றதென்று கூறி விளங்கவைப்பார். கோவிலினுள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுளைவாயில்களிலேயே துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி (ஒன்று என்ற பாவனையாக) நிற்கின்றார்கள்.

அவ்வாறாயின் சிவலிங்கம் எந்த உருவமாகவும் (கை,கால் போன்ற உறுப்புகள் கொண்டில்லாமையினால்) புரிந்து கொள்ள முடியவில்லையே?

சிவலிங்கம் என்பது அருவுருவத் திருமேனியென்று சொல்லப்படுகின்றது. அதாவது கால் கைகளுடன் கூடிய உருவமாகவும் இல்லாமல் உருவமே இலையென்று சொல்லுகின்றவாறும் இல்லாமல் இரண்டுமே கலந்து அருவுருவத் திருமேனியாகக் காட்சியளிக்கின்றது. லிங்கம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் அடையாளம் என்று பொருள்படும். எனவே சிவனை அடையாளப்படுத்துவதால் சிவலிங்கம் என்று கொள்ளப்படுகின்றது. சிற்ப சாத்திர முறைப்படி சிவலிங்கம் மூன்று பகுதிகளைக் கொண்டதென்றும் அதாவது:-அடிப்பாகம் ----- பிரம்ம பாகம் ---- பிரம்ம லிங்கம் ----ஆத்ம சோதிநடுப்பாகம் ----- விஷ்ணு பாகம் ----- விஷ்ணு லிங்கம் -----அருட்சோதிமேல்பாகம் ---- சிவன் பாகம் ----- சிவலிங்கம் ----- சிவசோதி என்றும் சொல்லப்படுகின்றது. எனவே சிவலிங்கத்தை வணங்கினால் மும்மூர்த்திகளையும் வணங்கிய அருள் கிடைக்கும்.

உருவமாக அமைக்கப்பட்டிருக்கின்ற இறைவனை விக்கிரகம் என்று கூறுவதேன்?

விக்கிரகம் = வி + கிரகம் (வி = மேலான, கிரகம் = உறைவிடம்) அதாவது மேலான உறைவிடம் என்னும் பொழுது இறைவன் சிறப்பாக உறையுமிடமென்று பொருள்படும்.

இவ்வாறு அமைகின்ற விக்கிரகங்கள் கல்லிலே செதுக்கப் பட்டவையாகவும் வேறு சில தாம்பர விக்கிரகமாகவும் அமையக் காரணமென்ன?

அதாவது இறைவன் ஒளி மயமானவன். கல்லை ஒன்றுடனொன்று உரசும்பொழுது ஒளி (நெருப்பு) உண்டாவதைக் காணலாம். எனவே தான் அப்படிப்பட்ட கல்லிலே இறைவனது திருவுருவங்கள் செதுக்கப்பட்டு கும்பாபிசேகத்தின் பொழுது கோவில்களிலே பிரதிட்டை செய்யப்படுகிறது. "சொல்லுக் கடங்கான்காண் சொல்லறிந்து நின்றவன்காண் கல்லுள் ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண்". என்று பட்டினத்தார்" கூறுகின்றார்.அடுத்து உற்சவ மூர்த்திகள் தாம்பர(தாமிர) விக்கிரகங்களாக அமைவதன் காரணமென்னவென்றால், உலோகம் மின்சாரத்தைக் கடத்த வல்லது. எனவே மூலத்தானத்திலிருக்கும் அருள் மின்சாரத்தை வீதியிலே செலுத்தவல்லது தாம்பர மூர்த்திதா னென்று வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.

சிற்பியினாலே கல்லிலே வடிக்கப்படும் பொழுதோ அல்லது கோவிலில் பிரதிட்டை செய்யப்பட முன்னரோ ஆச்சாரமற்ற இடங்களில் இந்த விக்கிரகங்களை வைப்பது தவறா?

கும்பாபிசேகம் நடைபெறும் வரையில் இவ்விக்கிரகங்கள் சாதாரண கல்லாகக் கணிக்கப்படுவதால் தான் அவ்வாறு வைக்கப்படுகின்றது. கும்பாபிசேகத்தையொட்டி இந்த விக்கிரகங்களை சலாதிவாசம் (தண்ணீரில் வைப்பது) தான்யாதிவாசம் (தானியத்தினுள் வைப்பது) செய்து மந்திரங்களாலே யந்திரங்களை எழுதி விக்கிரகத்தின் அடியிலே வைத்து யாகங்கள் செய்து சோதியை வளர்த்து அந்த சோதியைக் கும்பத்துக்குக் கொண்டுபோய் பின்னர் கும்பத்திலேயிருந்து பிம்பத்துக்குக் கொண்டு போவதாகிய கும்பாபிசேக நிகழ்வின் பின்னர் தான் இவ்விக்கிரகங்கள் தெய்வசக்தி பெற்றுவிடுவதால் இறைவன் வாழுமிடமாகக் கருதப்படுகின்றது.

புதிதாகக் கட்டப்பட்ட கோவிலுக்கு செய்யப்படுகின்ற கும்பாபிசேகத்தைவிட வேறெந்தச் சந்தர்ப்பங்களிலே கோவில்களில் கும்பாபிசேகம் இடம்பெறுகின்றது?

புதியதாகக் கட்டப்பட்ட கோவிலுக்குச் செய்யப்பட்ட கும்பாபிசேகத்தின் பொழுது சாத்தப்பட்ட அட்டபந்தனமானது (மருந்து சாத்துதல்) ஆகக்கூடியது பன்னிரணடு வருடங்கள் வரைதான் பழுதடையாமல் இருக்கும். இவ்வாறு சாத்தப்படுகின்ற அட்ட பந்தனம் பழுதடையும் பொழுது வாலத்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்ய ப்படும். சில சந்தா;ப்பங்களில் அட்டபந்தனக் கலவை பிழையான அளவுகளில் கலக் கப்பட்டாலோ அல்லது நன்கு இடிக்கப்படாவிட்டாலோ பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னரே பழுதடைய ஆரம்பித்துவிடும். இப்படியான சந்தர்ப்பங்களிலேயும் கும்பா பிசேகம் செய்யப்படும். அதைவிட கோவில் களிலே ஏதாவது பாரிய திருத்த வேலைகள் இடம்பெற்றாலும் கும்பாபிசேகம் செய்வது வழக்கம்.

அட்டபந்தனம் என்பது என்ன?

அட்டபந்தனம் என்பது ஆசனமும் மூர்த்தியும் நன்றாக ஒன்றி இணையும்படியாகச் சாத்தப்படும் ஒரு சேர்வையாகும்.
கொம்பரக்கு ----- 1 பங்கு
குங்குலியம் ----- 3 பங்கு
வெண்மெழுகு ----- 3 பங்கு
காவிக்கல் ----- 3 பங்கு
வெண்ணெய் ----- 3 பங்கு
செம்பஞ்சு ----- 3 பங்கு
சுக்கான் -----முக்காற் பங்கு
சாதிலிங்கம் ----- காற்பங்கு
போன்ற எட்டு விதமான பொருட்களாகும்.


பிரதோஷ விரதம் அருள்மிகுஸ்ரீபாலீஸ்வ‌ர‌ன்திருக்கோயில்

பிரதோஷ விரதம் அருள்மிகுஸ்ரீபாலீஸ்வ‌ர‌ன்திருக்கோயில்

பிரதோஷ விரதம் (திரயோதசி)
தேய்பிறை, வளர்பிறை என இரண்டு பக்ஷங்களிலும் வரும் அமாவாசை, பௌர்ணமி இரண்டிற்கும் பிறகு வரும் பதின்மூன்றாம் நாளிலே இப்பிரதோஷ விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. இவ்விரதம் மாலை நேரத்திற்குரியது.

சூரிய அஸ்தமனத்திற்கு முன்னுள்ள மூன்றேமுக்கால் நாளிகையும் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னுள்ள மூன்றேமுக்கால் நாளிகையும் (பிற்பகல் நாலரை மணியிலிருந்து இரவு ஏழரை மணிவரை ) பிரதோஷகாலம் எனப்படும். இந்நேரத்தில் சிவபெருமானை வணங்கி வழிபட வேண்டும். இவ்விரத காலத்தில் அன்றாடக் கடமைகளைச் செய்து, பகல் உணவு கொள்ளாமல் நீராடி மாலை வழிபாடுகளைச் செய்து சிவாலயம் சென்று பிரதோஷகாலப் பூசையைத் தரிசிக்க வேண்டும்.
பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்து பிறகு சோமசூத்திரப் பிரதக்ஷிணம் செய்ய வேண்டும். " சோமசூத்திரப் பிரதக்ஷிணம்" என்னும் வழிபாட்டு முறை என்பது முதலில் இடபதேவரை வணங்கி, இடமாகச் சென்று சண்டேஸ்வரரைத் தரிசித்து, பின் திரும்பி வந்து இடபதேவரை வணங்கி, வலப்பக்கமாகக் கோமுகை (பசுவின் முகம் போன்று செய்யப்பட்ட தீர்த்தம் விழும் பகுதி)வரை சென்று, மீண்டும் திரும்பி வந்து இடபதேவரை வணங்கி, மறுபடியும் இடமாகச் சென்று, சண்டேஸ்வரரை வணங்கி, இடபதேவரை இம்முறை தரிசியாது வலமாகக் கோமுகைவரை சென்று திரும்பி, இடபதேவரைத் தரிசியாமல் இடமாகச் சென்று, சண்டேஸ்வரரை வணங்கிப், பின் திரும்பி வந்து இடபதேவரைத் தரிசித்து, அவரது இரு கொம்புகளின் ஊடாக சிவலிங்கப் பெருமானை வணங்க வேண்டும் என்னும் விதிக்கமைய வழிபடுதலாகும். கோமுகையைக் கடவாது திருக்கோவில் வலம்வரும் இந்த சோமசூத்திரப் பிரதக்ஷிணம் பிரதோஷகால வழிபாட்டில் மிகச் சிறப்பிடம் பெறுகின்றது.
பிரதோஷ காலத்தில் நந்தியம் பெருமானுக்குச் செய்யும் "காப்பரிசி” நிவேதனம் சிறப்பானது. பச்சரிசியையும், பயற்றம் பருப்பையும் நீரில் நன்கு ஊறவைத்து வடிகட்டி அத்துடன் வெல்லமும், தேங்காய்ப்பூவும் சேர்த்துச் செய்வதாகும். பிரதோஷ கால உணவாக இக்காப்பரிசியையோ அல்லது சர்க்கரைப் பொங்கலையோ சாப்பிடலாம். பிரதோஷ காலத்தில் வீண் வார்த்தை பேசாது மௌனமாகத் தியானம் செய்தல் வேண்டும்.
சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை என்ற இம்மாதங்களுள் வரும் சனிப்பிரதோஷத்தில் (பிரதோஷம் சனிக்கிமையில் வரும்போது) விரதத்தை ஆரம்பித்து ஒரு வருடம் முறையாகக் கடைப்பிடித்துப் பின்னர் பூர்த்தி செய்தல் வேண்டும். தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புவோர் விரதத்தைத் தொடரலாம். ஆனால் ஒவ்வொரு வருடமும் விரத உத்தியாபனம் செய்தல் வேண்டும். இவ்விரதத்தைக் கைக்கொள்ளுவோருக்குக் கடன், வறுமை, நோய் அவமிருத்து, பயம், மரணவேதனை நீங்கும்.




”இரண நல்குர(வு), இரும்பாவம், இரும்பசி, உரோகம் அரணறும் பயம், கிலேசம், கேதம், அவமிருத்து மரண வேதனை இவையெல்லாம் அகற்றென வணங்கிப் புரண நாதனைப் பிரதோடத்தில் போற்றிடத் தகுமால்"






10.4.09

அருள் மிகு ஸ்ரீ பாலீஸ்வரர் திருக்கோயில் படங்கள்

http://paleeswarantemple.blogspot.com/


































































கீழ்ப்பிரிவுக்கான தேவாரங்கள்
பண்-காந்தார பஞ்சமம்
1. சொற்றுணை வேதியன் சோதி வானவன்பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பா;ய்ச்சினும்நற்றுணையாவது நமச்சி வாயவே.

பண் - நட்டபாடை
2. தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிகாடுடைய சுடலைப்பொடி பூசியோர் உள்ளங்கவர் கள்வன்ஏடுடைய மலரால் உனை நாட்பணிந் தேத்த அருள் செய்தபீடுடைய பிரமா புரமேவிய பெம்மான் இவனன்றே.
பண்-காந்தார பஞ்சமம்
3. பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரைஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்கோவினுக் கருங்கலம் கோட்டமில்லதுநாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே.
பண்-காந்தாரம்
4. மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறுசுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறுதந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறுசெந்துவர் வாயுமைபங்கன் திரு வாலவாயான் திருநீறே.
பண் - நட்டபாடை
5. உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழமண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமுழ வதிரும்அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.
மத்தியபிரிவுக்கான தேவாரங்கள்
பண் - நட்டபாடை
1. அங்கமும் வேதமு மோதுநாவர்அந்தணர் நாளுமடிபரவமங்குல் மதிதவழ் மாடவீதிமருக நிலாவிய மைந்த சொல்லாய்செங்கய லார்புனற் செல்வ மல்குசீர்கொள் செங்காட்டங் குடியதனுள்கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்கணபதி யீச்சரம் காமுறவே.
பண் - நட்டபாடை
2. நத்தார்படை ஞானன்பசு வேறின் நினைக் கவிழ்வாய்மத்தம்மத யானைஉரி போர்த்த மணவாளன்பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல்செத்தாரெலும் பணிவான்திரு கேதீச்சரத்தானே.
பண்-காந்தாரம்
3. மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும்பாடிபோதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போதுகாதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்கண்டே னவர் திருப் பாதம் கண்டறியாதன கண்டேன்.
பண்-காந்தார பஞ்சமம்
4. இடரினும் தளரினும் எனதுறு நோய்தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன்கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சைமிடறினில் அடக்கிய வேதியனேஇதுவோ எமை ஆளுமா றீவ தொன் றெமக் கில்லையேஅதுவோ வுனதின் னருள் ஆவடுறை அரனே
பண்- புறநீர்மை
5. என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமேயிருங்கடல் வையத்துமுன்னம் நீபுரி நல்வினைப் பயனிடைமுழுமணித் தரளங்கள்மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழிவாணனை வாயாரப்பன்னி யாதரித் தேத்தியூம் பாடியூம்வழிபடும் அதனாலே.
மேற்பிரிவுக்கான தேவாரங்கள்
பண் - காந்தார பஞ்சமம்
1. பரவும் பரிசொன்று அறியேன் நான் கண்டே உம்மை பயிலாதே இரவும் பகலும் நினைந்தாலும் ஏய்த்த நினைய மாட்டேனா கரவில் அருவிக் கமுகுன்ன தெங்கம் குலைக்கு கரும்பாலை அரவம் திரை காவிரிக் கோட்டத்து ஐயாருடைய அடிகேளே
பண் - நட்டபாடை
2. பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடை அவனிறை இறையணி வளையினை முலயவள் இணைவள தௌpலுடை இடவகை கறையணி பொழிநிறைய வயலணி கழுமல மமர்கன உருவினல் நறையணி மலர்நறுவிரை புல்கு நலம் வலி கழல் தொழல் மருவுமே. பண் - கொல்லி
3. தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்சார்கினுந் தொண்டர் தருகிலாப்பொய்மை யாளரைப் பாடாதே யெந்தைபுகழிர் பாடுமின் புலவீர்காள்இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்ஏத்த லாமிடர் கெடலுமாம்அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்குயாதும் ஐயூற வில்லையே.
பண் - நட்டபாடை
4. கூற்றாயின வாறு விலக்ககிலீர்கொடுமைபல செய்தன நானறியேன்ஏற்றாயடிக் கேயிர வும்பகலும்பிரியாது வணங்குவ னெப்பொழுதும்தோற்றாதென் வயிற்றின் அகம்படியேகுடரோடு துடக்கி முடக்கியிடஆற்றேனடி யேனதி கைக்கெடிலவீரட்டா னத்துறை யம்மானே.
பண் - செந்துருத்தி
5. மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதேமூளா தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடிஆளா யிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங்கிருப்பின் திருவாரூர் வாழ்ந்து போதீரேஅதிமேற்பிரிவிற்கான தேவாரங்கள்
பண்-கௌசிகம்
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கிஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவதுநாதன் நாமம் நமச்சி வாயவே.
பண்-புறநீர்மை
தாயினும் நல்ல தலைவரென் றடியார்தம்மடி போற்றிசைப் பார்கள்வாயினும் மனத்தும் மருவிநின் றகலாமாண்பினர் காண்பல வேடர்நோயிலும் பிணியும் தொழி லர்பால் நீக்கிநுழைதரு நூலினர் ஞாலம்கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்தகோணமாமலை அமர்ந்தாரே.
பண்-அத்தாளிக்குறிஞ்சி
நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானைஉறும்பொரு ளாற்சொன்ன வொண்தமிழ் வல்லார்க்கறும்பொழி பாவம் அவலம் இலரே.
பண்-புறநீர்மை
அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுதஅவனைக் காப்பது காரண மாகவந்த காலன்றன் ஆருயி ரதனைவவ்வி னாய்க்குன்றன் வண்மைகண் டடியேன்எந்தை நீஎனை நமன்தமர் நலியின்இவன்மற் றென்அடி யான்என விலக்கும்சிந்தை யால்வந்துன் திருவடி அடைந்தேன்செழும்பொழில்திருப் புன்கூர் உளானே.
பண்-தக்கராகம்
கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனைஅப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கிஎப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே.


















































மகா சிவராத்திரி அருள்மிகுஸ்ரீபாலீஸ்வ‌ர‌ன்திருக்கோயில்





மகா சிவராத்திரி அருள்மிகுஸ்ரீபாலீஸ்வ‌ர‌ன்திருக்கோயில்



தேவர்களுக்காகச் சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்ததும் பார்வதி தேவி பயந்து நடுங்கியவாறு தன் கைகளை எடுத்துக் கொண்டாள். பார்வதி தேவியின் பயத்தைப் போக்க நினைத்த சிவபெருமான் நெற்றிக்கண் நெருப்பினைக் குளிர் நிலவாக மாற்றி அம்பிகையை ஆட்கொண்டார்.உலகைக் காப்பதற்காக பாற்கடலில் விளைந்த அமுதத்தினைச் கிவபெருமான் உண்ணவே, பெருமானுக்கு நஞ்சு ஏதும் கேடு விளைவிக்குமோ என்று அஞ்சிய தேவர்கள் இரவு முழுவதும் விழித்திருந்த நாளே சிவராத்திரி என்றும் கூறுவார்கள்.பிரம்மனும் திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் எனப் போராட, அதனால் ஆணவ இருள் உலகைச் சூழ்ந்ததாகவும், அந்த இருளினைக் கண்டு விண்ணிலுள்ள தேவர்கள் அஞ்சவே அவர்களைக் காக்க சிவபெருமான் இலிங்கமாகத் தோன்றி சுடர்விட்டு அனைவருக்கும் அறிவூட்டிய நாளே சிவராத்திரி என்றும் கூறுவர்.சிவராத்திரியின் மகிமை பற்றிய ஒரு கதையும் உண்டு. ஒரு முறை வேடுவன் ஒருவன் காட்டிலே வேட்டையாடச் சென்ற போது புலி ஒன்று துரத்தவே, ஏற்கனவே கையிலிருந்த ஆயுதங்களைத் தொலைத்து விட்டதனால் தனது உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் அருகிலிருந்த வில்வமரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் விடவில்லை. மரத்தடியிலேயே படுத்துக் கொண்டது. மாலையாகியும் அவ்விடத்தை விட்டுப் புலி செல்லவேயில்லை. இதைக்கண்ட வேடுவன், இரவானதும் தூக்கத்தில் கீழே விழுந்துவிட்டால் புலிக்கு இரையாகி விடுவோமென அஞ்சி தூக்கம் வராமலிருக்க தாம் இருந்த வில்வமரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போடலானான். அந்த இலைகளெல்லாம் மரத்தின் கீழேயிருந்த சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்வது போன்று இரவு முழுவதும் தொடர்ந்து விழுந்து கொண்டேயிருந்தது. அன்றைய தினம் சிவராத்திரி தினமாகும். அந்த இரவெல்லாம் கண்விழித்து அறிந்தோ, அறியாமலோ சிவபூசை செய்த காரணத்தால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது. சிவபெருமான் அந்த வேடுவன் முன்னால் காட்சியளித்து அவனது பாவங்களை நீக்கி அவனுக்கு முக்திகொடுத்தார்.சிவராத்திரி முழுவதும் தூங்காமல் கண்விழித்து நான்கு காலப்பூசை செய்து சிவபெருமானை வணங்குபவர்களுக்கு சகல போகங்களும் கிடைப்பது மட்டுமில்லாமல் முக்தியும் கிடைக்குமென்று சொல்லப்படுகிறது. சிவராத்திரியன்று ஒரு முறை பஞ்சாட்சரம் உச்சரித்தால், ஏனைய நாட்களில் 100 முறை பஞசாட்சரம் ஜெபித்த பலன் கிடைக்கும்.வைஷ்ணவர்களும் இவ்விரதத்தை அனுட்டிக்க வேண்டுமென்று கருடபுராணம் கூறுகிறது.